/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார் மீது விழுந்தது மரம் தப்பியது கேரள குடும்பம்
/
கார் மீது விழுந்தது மரம் தப்பியது கேரள குடும்பம்
ADDED : அக் 14, 2024 04:32 AM

தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு, கேரளா, கோட்டயத்தை சேர்ந்த ராஜீவ், 39, குடும்பத்துடன் காரில் சுற்றுலா வந்தார். நேற்று காலை மூலையாறு அருகே வந்தபோது, சாலையோரம் பட்டுப்போன மரம் கார் மீது விழுந்தது.
இதில், காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பினர். தொடர்ந்து உயர் மின்னழுத்த ஒயர் சாலையில் அறுந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.
கொடைக்கானல் - வத்தலகுண்டு சாலை, தாண்டிக்குடி - வத்தலகுண்டு சாலை, கொடைக்கானல் மலைப்பகுதியில் சாலையோரங்களில் ஏராளமான மரங்கள் பட்டுப்போன நிலையில் விபத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.