/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கேலோ இந்தியா வூசு லீக் போட்டி: திண்டுக்கல் சாம்பியன்
/
கேலோ இந்தியா வூசு லீக் போட்டி: திண்டுக்கல் சாம்பியன்
கேலோ இந்தியா வூசு லீக் போட்டி: திண்டுக்கல் சாம்பியன்
கேலோ இந்தியா வூசு லீக் போட்டி: திண்டுக்கல் சாம்பியன்
ADDED : ஆக 05, 2025 04:29 AM

திண்டுக்கல் : பெண்களுக்கான மாநில 'கேலோ இந்தியா வூசு உமன்ஸ் லீக் போட்டியில் திண்டுக்கல் மாணவிகள் 9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கல பதக்கம், ஓவரால் சாம்பியனில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
கேலோ இந்தியா, தமிழ்நாடு வூசு சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான கேலோ இந்தியா வூசு உமன் லீக் போட்டிகள் கோவையில் நடந்தது.
இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 18 மாணவிகள் திண்டுக்கல் மாவட்ட வூசு சங்க செயலாளர் ஜாக்கி சங்கர் தலைமையில் கலந்து கொண்டு 9 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கல பதக்கம் வென்றதுடன் ஓவரால் கோப்பையும் பெற்றனர். சங்க செயலாளர் ஜான்சன், துணைச் செயலாளர் ரவி, பொருளாளர் கோபி சுழற் கோப்பை வழங்கினர். பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களுடன் பணத்தொகையும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவிகள் செப்டம்பரில் தெலுங்கானாவில் நடக்கும் தென்னிந்திய வூசு போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.