/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரண்டரை வயது குழந்தை கடத்தல்; 5 பேர் கைது
/
இரண்டரை வயது குழந்தை கடத்தல்; 5 பேர் கைது
ADDED : நவ 20, 2025 02:56 AM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இரண்டரை வயது பெண் குழந்தையை கடத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.
ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் கணவர் பாண்டியராஜ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது இரண்டரை வயது பெண் குழந்தையுடன் மஞ்சுளா 25, வசித்து வருகிறார். மஞ்சுளாவின் தோழி புல்லாக்கவுண்டனுாரை சேர்ந்த திவ்யா 25, என்பவரும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளாவுடன் வசித்து வந்தார். மஞ்சுளாவின் அண்ணன் விக்னேஷுடன் பழக்கம் ஏற்பட்டதால் திவ்யா வீட்டை விட்டு சென்றுவிட்டார்.
இதையறிந்த திவ்யாவின் கணவர் கலைச்செல்வன், திவ்யாவின் தந்தை பத்மநாதன் 57, கேசவன் 24, சதாசிவம் 57, கண்ணதாசன் 33, காளிங்கராயன் 58, ஆகியோர் மஞ்சுளாவின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி குழந்தையை காரில் கடத்தி சென்றனர். ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், எஸ்.ஐ., லியோனி ரஞ்சித் குமார் தலைமையிலான போலீசார் குழந்தையை கடத்தி சென்ற ஆறு பேரில் 5 பேரை கைது செய்து குழந்தையை மீட்டனர். தலைமறைவான கலைச்செல்வனை தேடி வருகின்றனர்.

