/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சலேத் மாதா விழாவில் முழங்கால் பவனி
/
சலேத் மாதா விழாவில் முழங்கால் பவனி
ADDED : மே 24, 2025 03:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு: மறவபட்டிபுதுார் சலேத் மாதா சர்ச் 140 வது ஆண்டு திருவிழா மே 13ல் நவநாள் நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்கள் எழுந்தருளிய பெரிய தேர் பவனி நடைபெற்றது.
அப்போது ஏராளமானோர் முழங்காலிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி சலேத் மாதாவின் தேரை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு நன்றி திருப்பலி,இரவு 8:00 மணிக்கு இன்னிசை நடைபெற்றது. ஏற்பாடுகளை மறவபட்டி பாதிரியார் ராபர்ட்,நிர்மலா சபை அருட் சகோதரிகள் ஆலோசனையில் ஊர் பெரியதனகாரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.