/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மினிபஸ், டூவீலர் விபத்தில் கத்தியுடன் வந்த ரவுடி பலி
/
மினிபஸ், டூவீலர் விபத்தில் கத்தியுடன் வந்த ரவுடி பலி
மினிபஸ், டூவீலர் விபத்தில் கத்தியுடன் வந்த ரவுடி பலி
மினிபஸ், டூவீலர் விபத்தில் கத்தியுடன் வந்த ரவுடி பலி
ADDED : ஆக 26, 2025 04:16 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் நத்தம் சாலையில் மினி பஸ், டூவீலர் மோதிய விபத்தில் இடுப்பில் பட்டாக்கத்தி சொருகியபடி வந்த வாலிபர் இறந்தார்.
திண்டுக்கல்லில் இருந்து கொசவம்பட்டி சென்ற மினிபஸ் நாகல்நகர் நத்தம் மேம்பாலத்தில் செல்லும்போது எதிரே 3 வாலிபர்களுடன் வந்த டூவீலர் மினி பஸ் மீது மோதியது.
இதில் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் 30, பஸ் சக்கரத்தில் சிக்கி இறந்தார். மற்ற இருவர் பாலத்தின் மீதிருந்து குதித்து தப்பினர். இறந்தவர் இடுப்பில் பட்டாக்கத்தி இருந்தது. திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணையில், இறந்தவர் நெடுஞ்சாலை, ஆள் இல்லாத இடங்களில் வண்டியை நிறுத்தி சிறுநீர் கழிப்பவர்களிடம் பட்டாக்கத்தியைக்காட்டி நகை, பணம், அலைபேசி பறித்துவிட்டு டூவீலரில் தப்பி செல்வதை வழக்கமாக செய்துவந்துள்ளார்.இவர் மீது வழிப்பறி, கொலை மிரட்டல் வழக்குகள் , கொலை வழக்கு உள்ளதும், இவர் ஓட்டிவந்தது திருட்டு டூவீலர் என்பதும் தெரிந்தது.
விபத்து பகுதியில் உள்ள கேமரா பதிவுப்படி தப்பியவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

