/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையால் குளிர்ந்தது கொடைக்கானல்
/
மழையால் குளிர்ந்தது கொடைக்கானல்
ADDED : ஆக 03, 2025 02:58 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது.
கொடைக்கானலில் சில மாதமாக வறண்ட வானிலை நீடித்து வந்தது. இரு வாரங்களாக சூறைக்காற்று வீசிய நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் நீர்வரத்து குறைந்து இங்குள்ள அருவிகள் வற்றின. தொடர்ந்து புழுக்கம் நிலவியது.
நேற்று காலை 11:00 மணிக்கு துவங்கிய மழை மதியம் 2:00 மணி வரை மிதமாக பெய்தது. தொடர்ந்து நகரை பனிமூட்டம் சூழ்ந்து எதிரே வரும் வாகனம் தெரியாத நிலையில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. ரம்யமான சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர்.
தாண்டிக்குடி கீழ் மலை பகுதியிலும் 2 மணி நேரம் மழை பெய்தது. தற்போதைய மழை மலை தோட்டப் பயிர் களுக்கு ஏற்றதாகும்.