/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானில் 12 மீட்டருக்கு நீளமான சுற்றுலா வாகனங்களுக்கு நோ என்ட்ரி! அதிரடி காட்டும் அதிகாரிகள்
/
கொடைக்கானில் 12 மீட்டருக்கு நீளமான சுற்றுலா வாகனங்களுக்கு நோ என்ட்ரி! அதிரடி காட்டும் அதிகாரிகள்
கொடைக்கானில் 12 மீட்டருக்கு நீளமான சுற்றுலா வாகனங்களுக்கு நோ என்ட்ரி! அதிரடி காட்டும் அதிகாரிகள்
கொடைக்கானில் 12 மீட்டருக்கு நீளமான சுற்றுலா வாகனங்களுக்கு நோ என்ட்ரி! அதிரடி காட்டும் அதிகாரிகள்
UPDATED : நவ 22, 2024 07:18 PM
ADDED : நவ 22, 2024 07:11 PM

திண்டுக்கல்; கொடைக்கானலுக்குள் 12 மீட்டருக்கு நீளமான சுற்றுலா பஸ்களை உள்ளே அனுமதிக்காமல் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள், சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமாக வரும் சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிகம் நீளம் கொண்ட பயணிகள், சரக்கு வாகனங்களாலும் போக்குவரத்து நெருக்கடி உண்டாகிறது. இதை தடுக்க மே 7 முதல் ஐகோர்ட் உத்தரவின்படி இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டு, தற்போது வரை அமலில் உள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், நவ.18 முதல் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்கள் கொடைக்கானல் செல்லும் மலைப் பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டி செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன் படி ஒரு வார காலமாக திண்டுக்கல் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் வத்தலக்குண்டு-கொடைக்கானல் செல்லும் ரோட்டில் செக்போஸ்ட் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் சரக்கு வாகனங்கள்,ஆம்னி பஸ்களை அளவுகோல் வைத்து அளந்து பார்த்தனர்.
ஏராளமான வெளி மாவட்டங்களிலிருந்து வரும் ஆம்னி பஸ்கள் அறிவிக்கப்பட்ட 12 மீட்டருக்கு அதிகமாக நீளம் கொண்டிருந்ததால் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தனர். பஸ்சை தடுத்து நிறுத்தி முழு விபரத்தையும் தெரிவித்து திருப்பி அனுப்பும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.நேற்றும் இதேபோல் பணியில் ஈடுபட்ட போது 10க்கும் மேலான ஆம்னி பஸ்கள் வந்தது. அதை ஆய்வு செய்த அதிகாரிகள் பஸ் டிரைவர்களிடம் திரும்பிச் செல்ல வலியுறுத்தினர். தற்போது வரை அபராதம் விதிக்கப்படவில்லை. அடுத்தக்கட்ட அறிவிப்புகள் வெளியானதும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.