/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானல், சிறுமலையில் குவிந்த சுற்றுலாபயணிகள்: போக்குவரத்து நெரிசல்
/
கொடைக்கானல், சிறுமலையில் குவிந்த சுற்றுலாபயணிகள்: போக்குவரத்து நெரிசல்
கொடைக்கானல், சிறுமலையில் குவிந்த சுற்றுலாபயணிகள்: போக்குவரத்து நெரிசல்
கொடைக்கானல், சிறுமலையில் குவிந்த சுற்றுலாபயணிகள்: போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 02, 2024 02:41 AM

கொடைக்கானல்:தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை அடுத்து கொடைக்கானல், சிறுமலையில்சுற்றுலா பயணிகள் குவிந்ததால்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலில் தொடர் மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அறவே இல்லாத நிலையில் இங்குள்ள பசுமை போர்த்திய மலைமுகடுகள், புல்வெளிகள் பச்சை பசேலென அழகுற காட்சியளித்தது .மழையால் உருவான திடீர் அருவிகள் பயணிகளை உற்சாகபடுத்தியது.
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை அடுத்து இங்கு குவிந்த சுற்றுலா பயணிகள் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றை ரசித்தனர்.
ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள், ஏரியில் படகு சவாரி செய்தனர். நேற்று காலை முதலே ஏராளமானோர் மலை நகரில் முகாமிட்டதால் பெருமாள்மலை வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடி வரை 2 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுங்கச்சாவடியில் தாமதமாக கட்டணம் வசூல் செய்யப்பட்டதே இதற்கு காரணம் என புகார் தெரிவித்தனர். இதை சரி செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுமலை: திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வெளி மாவட்டங்களிலிருந்து அதிகமான பயணிகள் 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்கின்றனர். ஒவ்வொரு வளைவு பகுதிகளிலும் நின்று இயற்கை காட்சிகளை பார்வையிடுவதோடு மலை முகடுகளையும் புகைபடம் எடுக்கின்றனர். தீபாவளி தொடர் விடுமுறையால் கார்கள்,டூவீலர்களில் இங்கு குவிகின்றனர்.
இங்குள்ள பழையூர்,புதுார்,சிறுமலை போன்ற ஊர்களில் குறுகிய ரோடுகளாக உள்ளன. இதனால் நேற்று புதுார்,பழையூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள் 3 கிலோ மீட்டர் துாரத்திற்கு அணிவகுத்து நின்றன. விடுமுறை நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க வேண்டும் என சிறுமலை ஊராட்சி சார்பில் பல மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.