/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மங்களப்புள்ளியில் கோசாலை பூமிபூஜை
/
மங்களப்புள்ளியில் கோசாலை பூமிபூஜை
ADDED : ஏப் 27, 2025 04:38 AM

ரெட்டியார்சத்திரம்: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலின் உபகோயிலான குருநாதநாயக்கனுார் அருகே உள்ள ஜி.கோயில்பட்டி மங்களப்புள்ளி மங்கலவள்ளி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோசாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக கட்டட பூமி பூஜை நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.
செயல் அலுவலர் யுவராஜ், கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, மாவட்ட தி.மு.க., அவைத்தலைவர் காமாட்சி, மாநகர பொருளாளர் சரவணன் பங்கேற்றனர். கோயில் பட்டாச்சாரியார்கள் ராமமூர்த்தி, பத்ரி, ரிஷிகேஷ்மணியம் அரவிந்த்சாமி பூஜைகளை நடத்தினர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.