/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கே.பி.நேஷனல் கல்லுாரி பட்டமளிப்பு
/
கே.பி.நேஷனல் கல்லுாரி பட்டமளிப்பு
ADDED : பிப் 18, 2024 01:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலக்குண்டு கே.பி. நேஷனல் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கல்லுாரி சேர்மன் இஸ்மத் பாட்சா தலைமையில் நடந்தது. தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவன எம்.டி., கண்ணன் முன்னிலை வகித்தார்.
டாக்டர் சங்கர்நடேசன் வரவேற்றார். எஸ்.பி., பிரதீப் பேசினார். சமூக சேவகர் காஜாமைதீன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். கல்லுாரி செயலாளர் பஜ்துல் ரஹ்மான் பேசினர். 320 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் கவுரவிக்கபட்டனர்.