ADDED : அக் 17, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் இ.பி. பவர் ஹவுஸ் எதிரே வ.உ.சி. நகரில் கே.ஆர். டெக்ஸ்டைல்ஸ் திறப்பு விழா நடந்தது.
விவேகானந்தா கல்வி அறக்கட்டளை கல்வி நிறுவன தலைவர் ரங்கசாமி, நவாமரத்துப்பட்டி விவேகானந்தர் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி இயக்குநர் அருண்கீர்த்தி, பள்ளி முதல்வர் மகிபாலா முன்னிலையில் கடை உரிமையாளர் கலைவாணி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கடை உரிமையாளர் கூறுகையில்,'' கலை நயம் மிக்க விதவிதமான சேலைகள், கண் கவர் ஆடைகள், சுடிதார் ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி விலைக்கே கிடைக்கும் என்றார்.

