ADDED : செப் 04, 2026 09:43 PM
திண்டுக்கல், செப்.5
திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்ரி தலைமை வகித்தனர். ஆசிரியை ஹேமா வரவேற்றார். முதன்மை முதல்வர் சந்திரசேகரன், துணை முதல்வர் பிரபா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாணவ, மாணவிகள் கிருஷ்ணர் ராதை வேடங்கள் அணிந்து பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்பு மரியாதை செய்த மாணவ, மாணவிகளுக்கு செயலாளர் பரிசுகள் வழங்கினார். உறியடி நிகழ்ச்சியில் மாணவர்களும் பங்கேற்றனர். ஆசிரியை ஆனந்தஹரிதா நன்றி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மழலையர் பள்ளி மாணவர்கள் கண்ணன், ராதை வேடம் அணிந்தும், அவர்களது தாயார் யசோதா வேடமிட்டும் பங்கேற்றனர். மாணவர்களுக்கு கயிறு இழுத்தல், உறியடித்தல், பாறையை துாக்கி எறிதல், புதையல் கண்டெடுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி முதல்வர் சவும்யா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
தொப்பம்பட்டி: பழநி தொப்பம்பட்டி தும்பலப்பட்டி சங்கர் பொன்னர் மேல்நிலைப் பள்ளியில் குளோபல் கேம்பஸ் பள்ளி மாணவர்கள் ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து விழாவை கொண்டாடினர். சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் சுதாகர்சாமி, செயலர் ராமசாமி, பொருளாளர் சுகுமாரன், தலைமை ஆசிரியர் ராச்சுமராஜ், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
