ADDED : செப் 04, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல், செப்.5-
கொடைக்கானல் பூம்பாறையை சேர்ந்தவர்கள் மனோன்மணி 62, லோகேஸ்வரன் 24. இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மனோன்மணி, அவரது மருமகள் ரோட்டில் வந்தபோது லோகேஸ்வரன் அவர்களுடன் தகராறு செய்து கத்தியால் மனோன்மணி கழுத்தில் கிழித்தார். படுகாயம் அடைந்த அவர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சையில் உள்ளார். கொடைக்கானல் போலீசார் லோகேஸ்வரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
