ADDED : செப் 04, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல், செப்.5-
கொடைக்கானல் – வத்தலக்குண்டு ரோட்டில் பனிக்கரை அருகே வனப்பகுதியில் நேற்று மாலை மரம் ஒன்று திடீரென சாய்ந்தது. இதனால் அவ்வழியாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
கொடைக்கானலை சேர்ந்த ரத்தினசாமி செண்பகனுார் பகுதியில் ரோட்டோரம் ஜீப்பை நிறுத்தி சென்றார். அருகில் இருந்த மரத்தின் கிளை திடீரென முறிந்து விழுந்ததில் ஜீப் சேதமடைந்தது.
