/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு
/
கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு
ADDED : ஆக 17, 2025 12:35 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கோயில்கள், வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகள் நடந்தது.
திண்டுக்கல் மலையடிவாரம் கிருஷ்ணர்கோயிலில் காலை முதலே சிறப்பு அபிேஷகம் ,தீபாராதனையுடன் வழிபாடுகள் நடந்தது.
கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து தரிசித்தனர். அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிேஷகம் வழிபாடுகள் நடந்தன.ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
சாணார்பட்டி : வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் கதிர் நரசிங்க பெருமாள் ,உற்ஸவர் கிருஷ்ணருக்கு 21 வகை திரவிய அபிஷேகம் ,சிறப்பு அலங்காரம் செய்ய பூஜைகள் நடந்தது. நத்தம், திண்டுக்கல், சாணார்பட்டி சுற்றுப்பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
காலை முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது. வேம்பார்பட்டி வேங்கடேச பெருமாள் கோயிலிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா பூஜைகள் நடந்தது. கே. அய்யாபட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடந்தது.
நத்தம்: மதுக்காரம்பட்டி கோகுலகிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை யொட்டி திருவிளக்கு பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நேற்று காலை பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரம் செய்ய தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி தேவியருடன் எழுந்தருள வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்து. பெண்கள் கோலாட்டத்துடன் கும்மியடித்தல், உறியடித்தல் என பல்வேறு விளையாட்டு போட்டிகள் ,கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அன்னதானம் வழங்கபட்டது.
கோவில்பட்டி அக்ரஹாரம் கிருஷ்ணன் கோயிலில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடபட்டது. நகர பொறுப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரபிரசாத்,நகர துணை அமைப்பாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கையில் புல்லாங்குழலுடன் நடனமாடினர்.
நடனம், கோலபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கொடைக்கானல்: வரதராஜ பெருமாள் கோயிலில் கோகுலாஷ்டமி விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, பஜன் நடந்தது.
வரதராஜ பெருமாள் கிருஷ்ணர் வேடத்தில் காட்சியளித்தார்.
ஏராளமான சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கோயிலில் வழிபாடு செய்தனர்.
அன்னதானம் நடந்தது.
ரெட்டியார்சத்திரம்: கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் மூலவர் செங்கமலவல்லி சமேத பெருமாளுக்கு திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை நடந்தது.
அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பழநி: கிழக்கு ரத வீதி தேரடி பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப் பட்டது.
கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன், போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், கன்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் ஹரிஹர முத்து அய்யர், சரவண பொய்கை கந்த விலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட பொருளாளர் ஆனந்த், வழக்கறிஞர் திருமலைசாமி, மாநில திருமடங்கள், திருக்கோயில்கள் பாதுகாப்பு அமைப்பாளர் செந்தில், மாவட்ட செயலாளர் சுதாகர், நகர செயலாளர் ரிஷி கலந்து கொண்டனர்.