/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இலக்கிய திறனறி தேர்வில் சாதித்த கிருஷ்ணா பள்ளி
/
இலக்கிய திறனறி தேர்வில் சாதித்த கிருஷ்ணா பள்ளி
ADDED : டிச 04, 2025 05:15 AM

ஒட்டன்சத்திரம்: தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம், மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மாணவனை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பாராட்டினார்.
தமிழக பள்ளி கல்வி துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அக்டோபரில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடந்தது. இதை தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் எழுதினர்.
இதில் கலந்து கொண்ட ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி மாணவன் மனிஷ்குமார் 99 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம், திண்டுக்கல் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். மாணவன் சிவக்குமார் 98 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
இம்மாணவர்கள், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பாராட்டினார்.
பள்ளி செயலர் கண்ணன், பள்ளி முதல்வர் ரங்கராஜ், உடன் இருந்தனர்.மேலும் இவர்களுக்கு தாளாளர் திருப்பதி, செயலர்கள் சுரேஷ், மீனா வாழ்த்து தெரிவித்தனர்.

