ADDED : பிப் 17, 2024 05:38 AM

வேடசந்துார்: அழகாபுரி குடகனாறு அணையில் இருந்து வினாடிக்கு 14 கன அடி வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
வேடசந்துார் அழகாபுரியில் குடகனாற்றின் குறுக்கே 27 அடி கொண்ட குடகனாறு அணை உள்ளது. இதில் தற்போது 25.20 அடி தண்ணீர் உள்ளது. நேற்று இங்குள்ள இடது பிரதான கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
நன்காஞ்சி ஆறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் (பழநி ) பாலமுருகன் தலைமையில் உதவி செயற்பொறியாளர் தனசேகர் முன்னிலையில் பழநி ஆர்.டி.ஓ., சரவணன் திறந்து வைத்தார். இதன் நீரால் கல்வார்பட்டி ஊராட்சி,கரூர் மாவட்டம் பெரியமஞ்சுவெளி பகுதியில் 1670 ஏக்கர் நிலம் பாசனம் பெறும்.
தாசில்தார் சரவணகுமார், உதவி பொறியாளர்கள் முருகன், மகேஸ்வரன்,பெரிய மஞ்சுவலி பாசன சங்கத் தலைவர் வெங்கடேசன், கல்வார்பட்டி பாசன சங்கத் தலைவர் கனகராஜ் பங்கேற்றனர்.