ADDED : அக் 30, 2024 05:05 AM

திண்டுக்கல் : கோயம்புத்துார் மாவட்டம் அத்யாயநா இன்டர்நேஸ்னல் பப்ளிக் பள்ளியில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்குயிடையிலான தென் மண்டல ஸ்கேட்டிங் சாம்பியன் ஷிப் 2024 போட்டி நடந்தது.
3750க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 19 வயதிற்குற்பட்ட 1000மீட்டர் பிரிவில் அச்யுதா பப்ளிக் பள்ளி 10ம் வகுப்பு மாணவன் நீல் லியோனார்டு வெள்ளி பதக்கம் வென்று தேசிய அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். வெள்ளி பதக்கம் வென்ற மாணவரை பள்ளியின் செயலாளர்கள் மங்களராம். காயத்ரி மங்களராம், முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை,பிரபா, பத்மநாபன், ராஜசுலோக்சனா, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், ஆசிரிய ஆசிரியைகள், மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் பாராட்டினர்.