ADDED : அக் 26, 2024 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட விளையாட்டு துறை சார்பாக நடந்த பல்வேறு போட்டிகளில் 2024-- 25 கல்வி ஆண்டிற்கான 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடந்தது.
குறுவட்ட , வருவாய் மாவட்ட அளவில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் சிலுக்குவார்பட்டி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றுமாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகளை பள்ளி தாளாளர் டேவிட் சகாயராஜ் பாராட்டி பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியர் லாரன்ஸ், உதவி தலைமை ஆசிரியை ஜெரின், உடற்கல்வி ஆசிரியர் விக்டர் ஜேம்ஸ், கால் பந்து பயிற்றுனர் சரவணபாண்டி பங்கேற்றனர்.