/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
திண்டுக்கல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 17, 2024 05:51 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட தடகள போட்டிகளின் சங்கத்தின் சார்பாக 10 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டிகள் மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெற்றது. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், பந்து எறிதல் என நடந்த போட்டிகளில்பண்ணை பப்ளிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இவர்களில் சந்திரஜித், ஹர்ஷன், சித்தார்த், யஷாந்த், ஸ்ருதிகா, அக்சன், ஜஷ்வந்த் வரூபன், ரெணி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் ஸ்ரீதர், துணை தலைவர் சந்தோஷ், தாளாளர் ஸ்ரீலீனாஸ்ரீ ,பள்ளி முதல்வர் பரமேஸ்வரி, துணை முதல்வர் ரெமி ஜோன் பசுபிகா, உடற்கல்வி ஆசிரியர்கள் சாந்தி பாராட்டினர்.

