/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெரியூர்பட்டி மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
பெரியூர்பட்டி மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஏப் 21, 2025 06:38 AM

செந்துறை: நத்தம் செந்துறை அருகே பெரியூர்பட்டியில் வடக்கு பார்த்த விஸ்வரூப மகாகாளியம்மன், வீரமகாமுனி, சின்னம்மாள் சுவாமிகளுக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
நேற்று முன்தினம் கணபதி, நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் மேளதாளம் முழங்க கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கபட்டது.