/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புன்னம்பட்டி கோயில்களில் கும்பாபிஷேக விழாக்கள்
/
புன்னம்பட்டி கோயில்களில் கும்பாபிஷேக விழாக்கள்
ADDED : ஜூலை 12, 2025 04:04 AM

நத்தம் : புன்னம்பட்டியில் வேட்டைக்காரன், சின்னம்மாள், பட்டவன், நொண்டிச்சாமி கோயில்களில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி கணபதி ஹோமம்,மஹாலெட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி ,முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 2-ம் கால யாக பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. மேளதாளம் முழங்க ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், வைகை உள்ளிட்ட பல்வேறு தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. புன்னப்பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.