/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம், வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்
/
நத்தம், வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 01, 2025 06:07 AM

நத்தம்: வேலம்பட்டி அண்ணாநகர் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மஹா கணபதி, மகாலெட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை மற்றும் முதல் காலயாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப் பட்டது.
அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் பரிவார தெய்வங்களான பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், துர்கை, ஆஞ்சநேயர், வாரஹி அம்மன், வரதராஜ பெருமாள், மகாலெட்சுமி சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கபட்டது.
வடமதுரை : காணப்பாடி சந்தன நவநீத கிருஷ்ணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் விழா துவங்கியது. 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீரூற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
கிராம கோயில் அர்ச்சகர்கள் சீனிவாசன், தாமோதரன் தலைமையிலான குழுவினர் நடத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், கிராம பெரியதனக்காரர் ராமலிங்க சேதுபதி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாண்டி, துணை செயலாளர் சுப்பையா பங்கேற்றனர்.
விழா ஏற்பாட்டினை நந்தனார் குல பங்காளிகள் செய்திருந்தனர்.

