/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்
/
வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 11, 2025 03:24 AM

வடமதுரை: வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஜூலை 8ல் மகா கணபதி பூஜையுடன் துவங்கிய இவ்விழாவில்2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடம் புறப்பாடாகி பட்டர்கள் கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
வடமதுரை முரளி சிவாச்சாரியார், நாராயணன் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் நடத்தினர். கரூர் எம்.பி., ஜோதிமணி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம், பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன், துணைத் தலைவர் மலைச்சாமி, செயல் அலுவலர் பத்மலதா, தி.மு.க., நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் சுப்பையன், காங்., வட்டார தலைவர்கள் ராஜரத்தினம், சாமிநாதன், கோயில் தக்கார் முத்துலட்சுமி, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் ஏராளமான பக்தகர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.