நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் வெங்கடேச பெருமாள், மகாலட்சுமி, வீரமல்லம்மாள், சப்த கன்னியர், நாச்சிமுத்து, நாட்ராயன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கிராம தெய்வங்கள் வழிபாடு, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மூலிகை வேள்வியுடன் 2 கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடந்தது.