
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: கோம்பைப்பட்டியில் முத்தாலம்மன்,பகவதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் யாக வேள்வி கணபதி பூஜையுடன் துவங்கியது.
அஷ்டலஷ்மி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம் செய்து பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை வானவேடிக்கை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து புனித நீர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்து கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வானில் கருடன் வட்டமிட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.