UPDATED : ஜூலை 16, 2026 04:25 PM
ADDED : ஜூலை 16, 2026 03:48 PM
அ நிறம் | அளவு
கொடைரோடு:கொடைரோடு அருகே தர்மாபுரி இரட்டை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி புனிதநீர் கலசங்கள் மேளதாளம் வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. யாகசாலையில் கணபதி ஹோமம்,கோ பூஜை, லட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி, உயிரூட்டல் உள்ளிட்ட ஆறுகால யாக வேள்விகள் நடந்தது.
கடம் புறப்பாட்டை தொடர்ந்து சீனிவாச நரசிம்ம சர்மா சுவாமிகள் தலைமையில் சுரேஷ் பவுன் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க ராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
