தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்


UPDATED : ஜூலை 16, 2026 04:58 PM

ADDED : ஜூலை 16, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2026 04:58 PM ADDED : ஜூலை 16, 2026 04:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:''மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் தங்கள் விவரங்களை தாங்களாகவே இணைய வழியில் பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு பணிகள் (ஜூலை 17) துவங்கி ஜூலை 31 வரை நடக்க உள்ளது'' என மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் துர்கா தெரிவித்து உள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

நாட்டின் முறையான திட்டமிடல், சிறந்த கல்வி, சுகாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் துல்லியமாக நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் முதற்கட்டமாக இன்று (ஜூலை17) துவங்கும் சுய கணக்கெடுப்பிற்கு 33 கேள்விகள் கேட்கப்படும்.

பொதுமக்கள் தாங்களாகவே http://se.census.gov.in/ இணையதளம் வழியாக சுய விவரங்களை பூர்த்தி செய்யலாம். பொதுமக்கள் பங்களிப்பு துல்லியமான தரவுக்கு முக்கியம் என்ற முழக்கத்துடன் இந்த ஆண்டுக்கான பணி இரு முக்கிய கட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.

கேள்விகளுக்கு இணையவழியில் பதிலளித்த அனைவருக்கும் சுய கணக்கெடுப்பு எண் அவரவர் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., ஆக வந்து விடும். அதனை மக்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

ஆக.,1 முதல் 30 வரை நடக்கும் வீட்டுப்பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு பணிக்காக அலுவலர்கள், ஊழியர்கள் விபரங்களை கணக்கெடுக்க வருவர். அப்போது அவர்களிடம் தெரிவித்தால் விபரங்களை சரிபார்த்து கணக்கெடுப்பை நிறைவு செய்து பதிவு செய்து கொள்வர். கூடுதல் விவரங்களை அறிய 1855 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us