ADDED : ஆக 28, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
பழநி, ஆக.29-
பழநி இந்திரா நகர் கவுண்டர் இட்டேரி ரோடு பகுதியில் கன்னிமூல வலம்புரி விநாயகர், நல்ல கருப்பண்ணசாமி, வீரமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
ஆக.,27 காலை முதல் கால பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால பூஜைக்கு பிறகு புனிதநீர் கலசங்கள் புறப்பாடுடன் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
