ADDED : ஆக 28, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
பழநி, ஆக.29-
பழநி அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த துாய்மை பணியாளர்கள் 17 பேரை புதிதாக பொறுப்பேற்ற தனியார் நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
இதனை கண்டித்து திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் தலைமையில் துாய்மை பணியாளர்கள் ஆக.,26 முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. எம்.பி., கம்யூ.,கட்சியினர், துாய்மை பணியாளர்கள் குடும்பத்தினர் பலர் பங்கேற்றனர்.
