ADDED : ஆக 28, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு, ஆக.29-
நேபாளத்தில் நடந்த இயற்கை சீற்றத்தில் மரணம் அடைந்தவர்களுக்காக எழுவனம்பட்டி சத்யா கிரக சேவாஸ்ரமத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் ராமானந்தா மகராஜ் சுவாமிகள் தலைமை வகித்தார். சிவயோகி ஸ்ரீநிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். மவுன அஞ்சலியும், மிருத்யுஞ்சய மகா மந்திரமும் ஜெபிக்கப்பட்டது. அனைத்து இந்து அமைப்புக்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
