ADDED : நவ 13, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: வி.புதுக்கோட்டை மினுக்கம்பட்டியில் கருப்பணசாமி, அங்காள பரமேஸ்வரி, பாப்பாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி தீர்த்தம், முளைப்பாரி அழைத்தல், வாஸ்து சாந்தி, தீபாராதனை, யாகவேள்வி, வேதபாராயணம், கடம் புறப்பாடு, கோயிலை வலம் வருதலுடன் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானில் இரு கருடன்கள் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
