நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம : நத்தம் கோசுகுறிச்சி கரையுறை சேர்ந்தவர் ஈஸ்வரன் 45.
இவர் 2023ல் மது போதையில் தனது தாய் செல்லாயியிடம் 80. பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அவர் தர மறுக்கவே ஆத்திரமடைந்த ஈஸ்வரன் அவரது தாய் செல்லாயி, பக்கத்து வீட்டுக்காரர் பெரியனாண்டி 80. அரிவாளால் வெட்டி கொலை செய்தார். தடுக்க சென்ற ஈஸ்வரனின் மகள் நதியா14, வயது சிறுமியையும், மாட்டையும் வெட்டினார். ஈஸ்வரனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். எஸ்.பி.,பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் பூங்கொடி உத்தரவில் ஈஸ்வரன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

