ADDED : டிச 14, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: கூ. குரும்பபட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் 27, சிவரஞ்சனி 23. திருமணமாகி சென்னையில் வசித்து வருகின்றார்.
மகேந்திரன் கூலி வேலை செய்றார். சிவரஞ்சனி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
அவருக்கு வளைகாப்பு யாருடைய வீட்டில் நடத்துவது என கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மகேந்திரன் கூ. குரும்பபட்டி வந்து அவரது பாட்டி லெட்சுமி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாணார்பட்டி எஸ்.ஐ., பொன் குணசேகரன் விசாரிக்கிறார்.