/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாடிக்கொம்பு கோயிலில் லட்ச தீபம்
/
தாடிக்கொம்பு கோயிலில் லட்ச தீபம்
ADDED : டிச 15, 2024 12:58 AM

திண்டுக்கல்:கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இங்கு சுவாமிக்கு அபிஷேகம் , சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் இருந்து தீபம் புறப்பட்டது.அதன்பின் கோயிலை சுற்றி ஒரு லட்சம் கார்த்திகை தீப விளக்குகளை பக்தர்கள் ஏற்றினர்.
ஏராளமானோர் தரிசித்தனர். சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வாண வேடிக்கையும் நடந்தது. பக்தர்களால் பல்வேறு மலர்களை கொண்டு சுவாமி உருவம் உருவாக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ்பாலாஜி ,உறுப்பினர்கள் செய்தனர்.