/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலம் அளவீடு
/
பழநி கோயில் கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலம் அளவீடு
ADDED : ஆக 09, 2025 03:46 AM

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு நைவேத்திய கட்டளைக்கு வழங்கப்பட்ட 23 ஏக்கர் நிலத்தை ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர்.
பழநி முருகன் கோயிலில் தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. கால பூஜைக்கு நைவேத்திய கட்டளைக்கு சென்னிமலை தம்புரான் அறக்கட்டளை சார்பில் 23 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.
இந்த நிலம் கோயிலுக்கு நைவேத்திய பொருட்கள் வழங்குவதற்கு பயன்படுத்த வழங்கப்பட்டநிலையில், இதனை பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் தனியார் பள்ளிகள், நிறுவனங்கள் வீடுகள் உள்ளிட்ட பல வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.
நீதிமன்றத்தின் வாயிலாக இந்நிலத்தை அறநிலையத் துறை பரா மரிக்க உத்தரவு பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் ஸ்ரீனிவாசன் தக்கராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது தலைமையில் 23 ஏக்கரையும் அளவிடும் பணி நடந்தது. இதில் துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர்கள் லட்சுமி மாலா, லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.