/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் மழை அடுக்கம் ரோட்டில் மண் சரிவு
/
கொடைக்கானலில் மழை அடுக்கம் ரோட்டில் மண் சரிவு
ADDED : அக் 08, 2024 01:47 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் அடுக்கம் ரோட்டில் மண் சரிவு ஏற்பட்டது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மிதமான மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நகரை பனிமூட்டம் சூழ எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. சுற்றுலா பயணிகளும் மழையால் விடுதிகளிலே முடங்கினர்.
முக்கிய சுற்றுலாத்தலங்கள் பயணிகளின்றி வெறிச்சோடியது. அடுக்கம்- பெரியகுளம் ரோட்டில் கனமழையால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் போது மண்சரிவு ஏற்பட தடுப்பு சுவர் சரிந்தது
அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடிபாடுகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.