/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
50 சதவீத மானியத்தில் புல்நறுக்கும் கருவிகள்
/
50 சதவீத மானியத்தில் புல்நறுக்கும் கருவிகள்
ADDED : ஜூலை 28, 2025 03:43 AM
திண்டுக்கல் :சிறு, குறு விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் புல்நறுக்கும் கருவிகள் வாங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.அவரின் செய்திகுறிப்பு: தமிழக கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2025 --26 நிதிஆண்டிற்கு கால்நடைகளுக்கு அளிக்கப்படும் தீவன மேலாண்மையில் தீவன விரயத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கால்நடைகளின் செரிமான தன்மையை அதிகரிக்கவும், உற்பத்தி திறனை பெருக்கவும், குறைந்தபட்சம் 2 பசுமாடுகள், கால் ஏக்கர் பசுந்தீவனம் பயிரிட்டு மின்சார வசதியுடன் பராமரித்து வரும் சிறு, குறு விவசாயிகளுக்கு மின்சாரம் மூலம் இயங்கும் 86 புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
ஏற்கனவே பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், விவசாயிகள், மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம்