/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வழக்கறிஞரிடம் ரூ.15 லட்சம் மோசடி
/
வழக்கறிஞரிடம் ரூ.15 லட்சம் மோசடி
ADDED : ஜன 24, 2025 05:36 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெண் வழக்கறிஞரிடம் டிரேடிங் மூலம் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என ஆசை காட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்த சென்னைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் வழக்கறிஞர் கனிமொழி 31, 2024ல் இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு டிரேடிங் செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என குறுந்தகவல் வந்தது. அதை நம்பிய கனிமொழி அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்திசையில் பேசிய நபர் கவர்ச்சியான வார்த்தைகளை பேசி கனிமொழியை நம்ப வைத்துள்ளார். இவரும் அதை உண்மை என நம்பி அந்த நபர் கூறும்போதெல்லாமல் ரூ.லட்சக்கணக்கில் ஆன்லைன் மூலம் அனுப்பினார். அந்த வகையில் ரூ.15 லட்சத்தை செலுத்தினார். சில நாட்கள் சென்றும் செலுத்திய பணமும், கூடுதல் பணமும் கிடைக்கவில்லை. சந்தேகமடைந்த கனிமொழி தன்னிடம் பேசிய நபரை தொடர்பு கொண்டார். அவர் அலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்திருந்தது. ஏமாற்றப்பட்ட கனிமொழி திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகாரளிக்க ஏ.டி.எஸ்.பி.,தெய்வம், இன்ஸ்பெக்டர் விக்டோரியா தலைமையிலான போலீசார் விசாரணையில், கனிமொழி அனுப்பிய பணம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஜீவா என்பவரது வங்கி கணக்கிற்கு சென்றது தெரிந்தது. அதன்படி போலீசார் சென்னை சென்று ஜீவாவை, கைது செய்தனர்.

