ADDED : நவ 12, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுவதை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக் கோரி திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற இதற்கு வழங்கறிஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று கோரிக்கை மனு அளித்தனர்.