ADDED : மார் 07, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் பெண் வழக்கறிஞர் முருகேஸ்வரி.
இவரை ஆபாசமாக திட்டிய அதே பகுதியை சேர்ந்த வாலிபரை சின்னாளப்பட்டி போலீசார் கைது செய்யாததை கண்டித்து, திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு பெண் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே பிரச்னைக்காக இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செந்தில்குமார்,செயலாளர் உதயகுமார் தெரிவித்தனர்.

