நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் வ.உ.சி., நினைவு தினம்,லாலாலஜபதிராய் நினைவு தினம்,சித்திரஞ்சன்தாஸ் பிறந்ததினம்,பிர்சா முண்டா பிறந்தநாள்,கிருபாளினி பிறந்தநாள் விழாக்கள் நடந்தது.
கிழக்கு மாவட்ட சிவாஜி மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார்.
மாநகர் சிவாஜி மன்ற செயற்குழு உறுப்பினர் அருணகிரி முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட மகளிர் அணித்தலைவி சுசிலாராணி வரவேற்றார்.
ஐக்கிய ஜனதாதள மாநில துணை செயலாளர் சுந்தர்ஈசன் பங்கேற்றார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாவட்ட காமராஜர் சிவாஜி தேசிய பேரவை நிறுவனர் வைரவேல் செய்தார்.

