/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நெரிசலில் லெக்கையன்கோட்டை ரோடு; கண்டுகொள்ளாத போலீசார்
/
நெரிசலில் லெக்கையன்கோட்டை ரோடு; கண்டுகொள்ளாத போலீசார்
நெரிசலில் லெக்கையன்கோட்டை ரோடு; கண்டுகொள்ளாத போலீசார்
நெரிசலில் லெக்கையன்கோட்டை ரோடு; கண்டுகொள்ளாத போலீசார்
ADDED : ஜன 15, 2024 11:24 PM

ஒட்டன்சத்திரம்: பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகமான வாகனங்கள் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ரோட்டில் சென்றதால் லெக்கையன்கோட்டை மூலச்சத்திரம் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வெளியூர் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கு செல்ல அதிகப்படியான வாகனங்கள் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ரோட்டில் ரோட்டில் சென்றன. லெக்கையன் கோட்டை பகுதியில் ரோடு பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த இடத்தை கடந்து செல்ல வாகனங்களுக்கு அரை மணி நேரத்துக்கு மேலாகிறது.
இப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு போதிய இடவசதி இல்லாத நிலையில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
அவர்களும் இந்த இடத்தை கடந்து செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். ஒரு வழி பாதையில் செல்லும் வாகனங்கள் மூன்று வரிசைகளில் நின்று சென்றன. இப்பகுதியில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த போலீசார் இப்பகுதியில் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
போலீசார் இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் செய்வதிலே குறிக்கோளாக உள்ளனர். போக்குவரத்தை சீர் செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. போக்குவரத்து தடை படும் இடங்களில் போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.