UPDATED : நவ 05, 2026 11:55 PM
ADDED : நவ 04, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை விலை சரிவடைந்து கிலோ ரூ.50 முதல் 80க்கு விற்பனை ஆனது.
ஒட்டன்சத்திரம், வடகாடு, பெத்தேல்புரம், கோட்டைவெளி பகுதிகளில் எலுமிச்சை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இவை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மழை காரணமாக தற்போது விளைச்சல் நன்றாக உள்ளதால் மார்க்கெட்டிற்கு வரத்து பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது.
கடந்த வாரம் கிலோ எலுமிச்சை ரூ.250 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.50 முதல் 80 க்கு விற்பனை ஆகிறது. விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘வரத்து அதிகரிப்பு, வெயிலின் தாக்கம் குறைவு காரணமாக எலுமிச்சை நுகர்வும் குறைந்துள்ளது’ என்றார்.
