/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எலுமிச்சை கிலோ ரூ.120க்கு விற்பனை
/
எலுமிச்சை கிலோ ரூ.120க்கு விற்பனை
ADDED : ஏப் 27, 2025 11:40 PM

ஒட்டன்சத்திரம் : சுட்டெரிக்கும் வெயிலால் தேவை அதிகரிப்பு மற்றும் வரத்து குறைவு காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கிலோ ரூ.80க்கு விற்ற எலுமிச்சை ஒரே வாரத்தில் விலை உயர்ந்து ரூ.120 க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம் மற்றும் மலைப்பகுதி கிராமங்கள், நீலமலைக்கோட்டை பகுதியில் விளைந்த எலுமிச்சை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. வெயிலின் காரணமாக ஜூஸ் உள்ளிட்டவைக்காக எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் கோயில் பூஜைகளிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், வியாபாரிகள்  அதிகமாக கொள்முதல் செய்கின்றனர். ஆனால் தேவைக்கேற்ப வரத்து இல்லாததால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ  ரூ.80க்கு  விற்றது தற்போது ரூ.120க்கு விற்பனையாகிறது.
விவசாயி மணிகண்டன் கூறுகையில் ''பல இடங்களில் எலுமிச்சை விளைச்சல் முடியும் தருவாயில் உள்ள நிலையில் விலை அதிகரித்துள்ளது. இது  ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே பயன் உள்ளதாக இருக்கும் ''என்றார்.

