ADDED : அக் 20, 2026 07:38 PM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி: தாண்டிக்குடி சித்தரேவு மலை ரோட்டில் சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இம்மலை ரோடு கன்னிவாடி, வத்தலக்குண்டு வனச்சரகப் பகுதியில் உள்ளது. இதன் அடிவாரத்தில் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் உள்ள நிலையில் இப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ரோட்டில் நடமாடிய சிறுத்தை வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. வனத்துறை ரோட்டில் நடமாடும் சிறுத்தை குறித்து எச்சரிக்கை பலகை வைத்து சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
