sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குறைகளை கூறுவோம் ... தீர்வு காண்போம்

/

குறைகளை கூறுவோம் ... தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம் ... தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம் ... தீர்வு காண்போம்


ADDED : ஜன 21, 2024 04:03 AM

Google News

ADDED : ஜன 21, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாய்ந்த வழிகாட்டி பலகை


தாண்டிக்குடி வத்தலக்குண்டு ரோட்டில் வழிகாட்டும் பலகை சாய்ந்த நிலையில் உள்ளதால் விபத்து அபாயம்உள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.

- -மணிகண்டன், தாண்டிக்குடி

நடவடிக்கை எடுக்கப்படும்


உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- -கண்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர்

மின் சிக்கனம் வேண்டும்


பழநி நகராட்சி பகுதிகளில் பகல் நேரங்களிலும் தெருவிளக்கு எரிகிறது. உரிய பணியாளர்களை கொண்டு மின்சிக்கன நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்.

- -ராஜலிங்கம், பழநி

உடனடி நடவடிக்கை


பகலில் உபயோகமின்றி எரியும் மின் விளக்குகளை சரியான நேரத்தில் செயல்படுத்த ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

- -உமா மகேஸ்வரி, நகராட்சி தலைவர், பழநி

பயன்பாடற்ற சுகாதார வளாகம்


பாடியூரில் கால்நடை மருந்தகம் அருகில் உள்ள பொது சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளது. இதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- மணிகண்டன், பாடியூர்.

நடவடிக்கை எடுக்கப்படும்


திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்பாட்டை தவிர்க்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதார வளாகத்தை பயன்படுத்தும் போக்கை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

- சந்தோஸ்குமாரி, ஊராட்சி தலைவர், பாடியூர்.

சேதமடைந்த மின்கம்பங்கள்


ஸ்ரீராமபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டி காலனியில் உள்ள இரண்டு மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. விபத்து ஏற்படும் முன் ஊராட்சி,மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.- -கருப்புசாமி, பூத்தாம்பட்டி

உடனடியாக சீரமைக்கப்படும்


சேதமடைந்தமின்கம்பங்கள் மின் துறை மூலம் உடனடியாக சீரமைக்கப்படும்.- -முருகன், ஊராட்சி தலைவர், ஸ்ரீராமபுரம்

ரோட்டில் ஆபத்தான பள்ளம்


கோபால்பட்டி சுகாதார நிலையம் எதிரே நத்தம் நெடுஞ்சாலையில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் ரோட்டில் ஆபத்தான பெரிய பள்ளம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும்.

- -இளங்கோவன், கோபால்பட்டி.

நடவடிக்கை எடுக்கப்படும்


நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று ரோட்டில் உள்ள பள்ளத்தை சீரமைக்கநடவடிக்கை எடுக்கப்படும்.

- -கந்தசாமி, தலைவர், வேம்பார்பட்டி.

பொது கழிப்பறை வேண்டும்


ஒட்டன்சத்திரம் நகராட்சி சத்யா நகரில் பொது கழிப்பிட வசதி இல்லாமல் உள்ளது. இதனால் திறந்த வெளியையேமக்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும்.

--வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம்

நடவடிக்கை மேற்கொள்ளப்படும்


மக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்ப்பறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

-- திருமலைசாமி, நகராட்சி தலைவர், ஒட்டன்சத்திரம்.

தெருவிளக்கு வேண்டும்


சின்னாளபட்டி மேட்டுப்பட்டி சேவா சங்க தெருவில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -குமரேசன், சின்னாளபட்டி.

நடவடிக்கை எடுக்கப்படும்


பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- --செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர், சின்னாளபட்டி.






      Dinamalar
      Follow us