/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நல்லதொரு வழி காண்போம்: மாவட்டத்தில் அதிகரிக்கும் மயில்களின் இறப்பு:கட்டுப்படுத்த தேவை வனத்துறை நடவடிக்கை

ADDED : டிச 19, 2024 05:32 AM

மயில் நமது நாட்டின் தேசிய பறவை. மேற்குத் தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை, மத்திய சமவெளி பகுதியில் மயில்கள் அதிகமாக வசிக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 50க்கும் அதிகமான மயில்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் மயில்களால் பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்படுவதாக குறைதீர் கூட்டங்களில் விவசாயிகளின் புகார்களும் அதிகரித்து வருகிறது.
மயில்கள் புதர்காடுகள், வன எல்லைப் பகுதிகள், குறைவான மழை உள்ள முற்றிலும் வளர்ச்சி இல்லாத பகுதிகளை வாழ்விடங்களாக கொண்டிருக்கும்.
ஆனால் தற்போது நகர்புறங்களிலும் அதிக அளவில் பரவியிருப்பது மனித, மயில்கள் மோதலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
வேளாண் பயிர்களுக்கு பாதிப்பு அதிகரிப்பதால் மயில்களின் இறப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 10 ஆண்டுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள், மின்சாரம் , நாய்கள் கடித்து இறப்பது, வேட்டையாடுதல், வாகன விபத்து மூலம் 420 மயில்கள் இறந்து உள்ளது தெரிய வந்துள்ளது.இதற்கு தீர்வு காண வனத்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.