/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைகளை கூறுவோம் ...தீர்வு காண்போம் பகுதிக்காக...
/
குறைகளை கூறுவோம் ...தீர்வு காண்போம் பகுதிக்காக...
ADDED : ஜன 08, 2024 05:50 AM
நாய்கள் தொல்லை
கொடைக்கானல் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சப்படுகின்றனர். இதைத்தடுக்க வேண்டும்.
-துரை,கொடைக்கானல்
கட்டுப்படுத்தப்படும்
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
-செல்லத்துரை,நகராட்சி தலைவர்,கொடைக்கானல்.
ரோட்டில் கழிவுநீர்
வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே சாக்கடை கட்டுவதால் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.
---தயாளன், வேடசந்துார்.
தீர்வு காணப்படும்
உடனடியாக சரி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
-மேகலா,பேரூராட்சி தலைவர்,வேடசந்துார்.
குப்பையால் சீர்கேடு
பழநி அடிவாரம் இட்டேரி ரோடு பகுதியில் குப்பை அதிகளவில் கொட்டப்படுகிறது. இதை அகற்ற வேண்டும்.
-முருகேசன்,பழநி
அகற்றப்படும்
போதுமான சுகாதார பணியாளர்கள் இல்லை. இருப்பவர்களை வைத்து பணிகள் நடக்கிறது. குப்பை அகற்றப்படும்.
-தீனதயாளன்,கவுன்சிலர்,பழநி.
சீர்கேடாகும் குப்பை
சாணார்பட்டி ஊராட்சி பகுதியில் வீரசின்னம்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
-நிர்மல்ராஜா. சாணார்பட்டி.
தீர்வு காணப்படும்
சாணார்பட்டி ஊராட்சி குடியிருப்பு பகுதியில் குப்பையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
-கருப்பையா, ஊராட்சி செயலர், சாணார்பட்டி.
பயன்பாடில்லா சுகாதார வளாகம்
ஒட்டன்சத்திரம் நகராட்சி 16 வது வார்டில் உள்ள பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டதிலிருந்து இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
-சசிகுமார் ஒட்டன்சத்திரம்.
மாற்று யோசனை
சுகாதார வளாகத்தை பயன்படுத்த யாரும் இதுவரை முன்வரவில்லை. இதனால் இங்கு நுாலகம் அமைக்க நகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
-பழனிச்சாமி,கவுன்சிலர்,ஒட்டன்சத்திரம்.
ஆக்கிரமிப்புகளால் அவதி
சின்னாளபட்டி விலக்கு முதல் பூஞ்சோலை வரை ரோட்டோர ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
-ஜி.குமார், சின்னாளபட்டி.
நடவடிக்கை எடுக்கப்படும்
நெடுஞ்சாலைத்துறை மூலம் இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
-செல்வராஜ்,செயல் அலுவலர்,சின்னாளபட்டி பேரூராட்சி.
நடுரோட்டில் மின்கம்பம்
அய்யலுார் வண்டி கருப்பணசுவாமி கோயிலிலிருந்து கஸ்பா அய்யலுார் பகுதி செல்லும் ரோட்டில் நடுவே இருக்கும் மின்கம்பத்தால் விபத்து ஆபத்து உள்ளது.
-மணிகண்டன்,குளத்துப்பட்டி.
மாற்றி அமைக்கப்படும்
பேரூராட்சி நிர்வாகம் மாற்றி அமைப்பதற்குரிய கட்டணம் செலுத்தினால் மாற்றி அமைக்கப்படும்.
-செல்வக்குமார், உதவி மின் பொறியாளர், அய்யலுார்.