sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்...

/

குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்...

குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்...

குறைகளை கூறுவோம்... தீர்வு காண்போம்...


ADDED : மார் 03, 2024 06:24 AM

Google News

ADDED : மார் 03, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பையால் சுகாதாரக்கேடு


திருவள்ளுவர் குறுக்கு தெருவில் குப்பையை ஆங்காங்கே கொட்டுவதால் சுகாதாரக்கேடு உருவாகிறது. உரிய இடத்தில் பொதுமக்கள் குப்பையை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -முத்துவேல், பழநி

நடவடிக்கை தொடரும்


துாய்மை பணியாளர்கள் வருகை தினமும் உள்ளது. அவர்களிடம் மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து கொடுத்தால் சுகாதாரம் மேம்படும். பொதுமக்களுக்கு விழ்ப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

- -செபாஸ்டின், கவுன்சிலர், பழநி

கழிவுநீரால் சுகாதாரக்கேடு


வேடசந்துார் ஆத்துமேடு மேம்பாலத்தின் வடக்கு நோக்கி செல்லும் கால்வாய் திட்டத்தின் குளறுபடியால் கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -மலர்கண்ணன், வேடசந்துார்

நடவடிக்கை எடுக்கப்படும்


கட்டுமான பணியின் ஆய்வுக்கு பின் கழிவு நீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

-மேகலா, நகராட்சி தலைவர், வேடசந்துார்

குளத்திற்குள் குப்பை பிலாத்தில் உள்ள பெரிய குளத்திற்குள் சிலர் இரவோடு இரவாக குப்பையை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


- -மணி, ஆண்டிப்பட்டி.

முறையாக பராமரிக்கப்படும்


நீர்வள பகுதிகளில் குப்பை கொட்டுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

- -பத்மா, ஊராட்சி தலைவர், பிலாத்து.

தொகுப்பு வீடுகளில் அபாயம்


சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சி ஜெ.ஜெ.நகரில் உள்ள தொகுப்பு வீடுகள் சேதமடைந்து உள்ளன. விபத்து அபாயத்தில் குடியிருப்போர்கள் அஞ்சுகின்றனர். உடனடியாக மராமத்து பணி மேற்கொள்ளவேண்டும்.

-சதீஷ்குமார்,ஜே.ஜே.நகர்

விரைவில் சீரமைக்கப்படும்


காலனி தொகுப்பு வீடுகள் சேதம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டுள்ளது. அதற்கான நிதி வந்தவுடன் சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

-மணிமாறன், ஊராட்சி தலைவர், செங்குறிச்சி.

பயன்பாடின்றி கழிப்பறைகள்


பன்றிமலை ஊராட்சி நுழைவுவாயில் பகுதியில் 10க்கு மேற்பட்ட தனிநபர் கழிப்பறைகள் பயன்பாடின்றி உள்ளது. பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -குணா, பன்றிமலை.

விரைவில் நடவடிக்கை


பயனற்ற நிலையில் உள்ள தனி நபர் கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைவில் நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.

- -தேவி, ஊராட்சித் தலைவர்,

பன்றிமலை.

கழிவுநீரால் சுகாதாரக் கேடு


பழநி திண்டுக்கல் ரோட்டில் தும்மிச்சம்பட்டிபுதூர் வழியில் உள்ள சாக்கடையை துார்வாராமல் கழிவு நீர் தேங்குவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--சக்திவேல், ஒட்டன்சத்திரம்

நடவடிக்கை எடுக்கப்படும்


தும்மிச்சம்பட்டிபுதுார் வழியாக செல்லும் ஓடையை தூர்வாரி கழிவுநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

-- திருமலைச்சாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர்

கூடுதல் தெருவிளக்கு வேண்டும்


சின்னாளபட்டி மேட்டுப்பட்டி சேவாசங்க தெருவில் போதிய தெருவிளக்கு வசதியின்றி உள்ளதால் பாதசாரிகள் பயணத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. கூடுதல் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும்.

- -குமரேசன், சின்னாளபட்டி

நடவடிக்கை எடுக்கப்படும்


ஆய்விற்கு பின் கூடுதல் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- -செல்வராஜ், செயல் அலுவலர், சின்னாளபட்டி






      Dinamalar
      Follow us